இரசிகருக்கும் பாகிஸ்தான் வீரருக்குமிடையில் மோதல் ; மைதானத்தில் பதற்றம்
மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரருக்கும் இரசிகருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மைதானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.
குறித்த போட்டியில் நியூசிலாந்து அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 - 0 என்ற அடிப்படையில் தொடரை வென்றது.
இந்தநிலையில் போட்டி நிறைவடைந்த பின்னர் எல்லைக் கோட்டுக்கு அருகே இரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் வீரர் குர்ஷ்தில் ஷா, இரசிகர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து கடுமையான வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. உடனடியாக பாதுகாவலர்கள் குர்ஷ்தில் ஷாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
அதேவேளையில் இரசிகரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர்.
Khushdil shah fight with fan after the match!#PAKvNZ #NZvsPAK #PakistanCricket pic.twitter.com/QVnZ5mrTEc
— 𝐅 𝐀 𝐈 𝐙 𝐀 𝐍 💫🇵🇰 (@Faizanali_152) April 5, 2025