கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பு மீண்டும் பதற்ற நிலை!
கொழும்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றநிலையேற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் நேற்றையதினமும் பௌத்தமதகுருமார் அடங்கிய குழுவொன்று கஜேந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதேவேளை கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.