உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு
உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் வகையின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்தின் பாதுகாப்பு தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கவலைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மருந்து மற்றும் அது தொடர்பில் ஏற்பட்டுள்ள கவலைகள் தொடர்பான உண்மைகளை முன்வைக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டொக்டர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு வகை ஆஸ்பிரின் மருந்துகளை திரும்பப் பெற முடிவெடுப்பதால் சந்தையில் ஆஸ்பிரின் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.