ஊரடங்கு சட்டத்தை மதிக்காது இடம்பெற்ற ஆலயத் திருவிழா; சமூக ஆர்வலர்கள் விசனம்
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி ஓர் ஆலயத்தில் விழா நடத்தப்பட்டதாக அட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பகுதியிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திருவிழா நேற்று (22) திம்புல போகஹவத்த கோவிலில் நடைபெற்றது. இந்நிலையில் விழாவை நடத்தியமைக்காக அட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றில் கோவில் நிர்வாகக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொட்டகலை சுகாதார அதிகாரி சுதர்சன் குறிப்பிட்டார்.
மேலும் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் சரியாக முகக்கவசம்கூட அணியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மக்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளை இவ்வாறு உதாசீனம் செய்வது கொரோனா பரவை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.