சொந்த வீட்டில் தாயை மயங்க வைத்து காதலனுடன் உல்லாசம் ; இறுதியில் 19 வயது மகளால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்
குஜராத் மாநிலம், ஜுனாகத் அருகே உள்ள இவ்னகர் கிராமத்தில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் சமூகத்தையே உலுக்கியுள்ளது.
இவ்னகர் கிராமத்தில் தம்பதியர் தங்களது நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்தனர். இவர்களது மூத்த மகள் (19), படிப்பில் ஆர்வம் இல்லாமல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார்.

ஆயுள் தண்டனை
கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 29-ஆம் திகதி அன்று மாலை, வேலை முடிந்து வீடு திரும்பிய கணவர் தன் மனைவி தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
வீட்டில் திருட்டு நடந்ததற்கான அடையாளங்கள் ஏதுமில்லை, அதேசமயம், சிசிடிவி கேமராக்கள் சம்பவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அணைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பொலிஸாரின் தீவிர விசாரணையில், 19 வயது மகள் தனது பணியிடத்தில் அறிமுகமான இளைஞர் ஒருவருடன் ரகசியக் காதலில் இருந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று, தன் தாயைத் தந்திரமாகத் தூங்க வைக்க, தந்தையின் தூக்க மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்துள்ளார்.
தாய் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற நிலையில், மீனாட்சி தன் காதலனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, திடீரென விழித்தெழுந்த தாய், மகள் தன் காதலனுடன் இருப்பதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார். இளைஞனை விரட்டியடித்த அவர், தன் கணவரிடம் இச்சம்பவத்தைக் கூறிவிடுவேன் என்று திட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மகள், தந்தை தண்டனை வழங்குவார் என்ற பயத்தில், ஸ்டோர்ரூமில் இருந்த இரும்புக்கம்பியால் தன் தாயின் தலைப்பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த பின், எதையும் அறியாதது போலத் தன் அறையில் தூங்குவது போல் மீனாட்சி நாடகமாடியுள்ளார்.
எனினும், முரண்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மகளையும், அவருக்குத் துணையாகச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்ட அவரது காதலனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி விதித்துத் தீர்ப்பளித்தது.