இதயங்களை கனக்கவைத்த முன்னாள் போராளியின் கண்ணீர் கதை!(Video)
தமிழர் மீட்புக்காய் முன்னின்று போராடிய முன்னாள் போராளி ஒருவரின் கண்ணீர் கதையை சுமந்து வருகின்றது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி. ஒருகாலத்தில் வீர மறவர்களாக மக்கள் மத்தியில் மிக கம்பீரத்துடன் வலம் வந்தவர்கள் இன்று யாசகம் பெற்று வாழும் நிலையில் உள்ளமை கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது.
தமிழர் தாயக மீட்புக்காய் போராடியவர்களின் இன்றையநிலை வேதனை கொள்ளவைக்கின்றது. எமக்காக போராடியவர்கள் இன்று எவ்வாறான நிலையில் உள்ளார்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு காலை இழந்த நிலையில் கையும் ஏலாத நிலையில் இன்று அவர் படும் கஸ்ரங்கள் , இவை அனைத்தையும் தாண்டி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்த வேண்டிய அவலநிலையில் உள்ளமைக்கு யார் காரணம். வீரமறவர்களாக எம் இனத்தின் விடிவிக்காக களமாடியவர்கள் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேவேளை தம்மை வைத்து வாழ்க்கை நடத்தும் சிலர் தொடர்பில் அவர் வெறுப்பை வெளியிட்டதுடன், தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.