ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து போராட்டம் முன்னெடுக்க தீர்மானம்
ஆசிரியர்கள் மீது நேற்று முன்தினம் (24ம் தேதி) நடத்தப்பட்ட கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்கள் இணைந்து நாளை (27) பாடசாலை நேரத்திற்கு பின் பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முறைப்பாடு செய்ய தீர்மானம்
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தேவையான பணம் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படா விட்டால், அடக்குமுறையை பொருட்படுத்தாது எதிர்காலத்தில் கடுமையான தொழில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.