யாழில் பிரபல விடுதியில் வைத்தியருடன் இருந்த ஆசிரியை... கணவன் செய்த செயல்!
யாழ்ப்பாண பகுதியில் உள்ள பிரபல விடுதிக்குள் கடந்த 04-11-2024 ஆம் திகதி மூன்று பேர் கொண்ட ஆண்கள் குழு ஒன்று விடுதியில் இருந்த அறையொன்றை உடைத்து உள்ளே நுழைத்து அங்கிருந்த பெண் மற்றும் ஆண் ஒருவரையும் நையப்புடைத்துள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த குழுவில் இருந்த ஆண் ஒருவரின் மனைவியான 36 வயதான பாடசாலை ஆசிரியையும், வைத்தியர் ஒருவருமே இவ்வாறு நையப்புடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் விடுதி நிர்வாகம் முறைப்பாடு செய்யவில்லை எனத் தெரியவருகின்றது.
குறித்த சம்பவத்தின் போது, தலையில் காயமடைந்த வைத்தியர் விடுதி நிர்வாகத்தால் உடனடியாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வைத்தியருடன் தங்கியிருந்த ஆசிரியை கணவன் தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகத் தெரியவருகின்றது.
மேலும், குறித்த வைத்தியரும் குறித்த ஆசிரியையும் பாடசாலை இடம்பெரும் வேளையில் அடிக்கடி குறித்த விடுதியில் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என விடுதி ஊழியர்கள் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.
விடுதிக்குள் கணவன் புகுந்து தேடுவதை அறிந்த குறித்த ஆசிரியை தானும் வைத்தியரும் இருந்த அறைக்கதவை பூட்டி வைத்திருந்ததாகவும் கணவனும் அவனுடன் வந்தவர்களும் அறையை தள்ளி உடைத்து இருவரையும் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த வைத்தியர் ஆசிரியையை மட்டுமல்லாது வேறு சில இளம் பெண்களையும் அந்த விடுதிக்கு தனது காரில் அழைத்து வந்து தங்குபவர் என விடுதியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விடுதி வைத்தியரின் நெருங்கிய நண்பனுக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவருகின்றது.