பட்டதாரிகளை குறிவைத்து ஏமாற்றிய ஆசிரியை ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி
சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில், ஒரு பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் எஹெலியகொட புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சில காலத்திற்கு முன்பு ஒரு அரசியல்வாதியுடன் நெருக்கமாக இருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
அந்தக் காலகட்டத்தில், சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாகக் கூறி பட்டதாரிகளிடம் பல லட்சம் ரூபாய் பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.