தமிழர் பகுதியில் பெரும் துயரை ஏற்படுத்திய ஆசிரியையின் மரணம் ; அக்காவின் மகளை பார்க்க சென்று நடந்த சம்பவம்
அரச பாடசாலை ஆசிரியை ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை, சூசையப்பர் வீதி, 2-ஆம் குறுக்கு பகுதியில் வசித்து வந்த 57 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடற்கூராய்வுப் பரிசோதனை
சனிக்கிழமை இரவு, ஆசிரியையின் மூத்த சகோதரியின் இளைய மகள் வீட்டுக்குச் சென்றபோது, ஆசிரியை மண்டபத்தில் குப்புற விழுந்து மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.
உடனடியாக 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆசிரியை உயர் குருதி அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
உடற்கூராய்வுப் பரிசோதனையில், அவருக்குத் தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.