ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கம் விடுத்த அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் அன்றைய தினத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளிக்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. யல்வெல பஞ்ஞாசேகர தேரர், இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதேவேளை, பாடசாலை ஆரம்ப தினத்திலேயே ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
மேலும் வருகின்ற 25ஆம் திகதி பாடசாலைகளுக்கு சமூகமளித்து, அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து படிப்படியாக பாடசாலைகளை திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.