பாடசாலை மாணவிகளிடம் மோசமாக நடந்துகொண்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
குருநாகல் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் புறநகர் பகுதியில் உள்ள கலப்பு பாடசாலை ஒன்றின் ஆங்கில ஆசிரியர் ஒருவரை குருநாகல் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இன்று (13.09.2023) கைது செய்துள்ளது.
ஆசிரியரின் செயன்முறை
குறித்த ஆசிரியர் சில மாதங்களுக்கு முன்னர் அந்தப் பாடசாலையில் இணைந்துள்ளார். ஆனால், பாடம் நடாத்தும்போது தேவையில்லாமல் முத்தமிடுவதாக பள்ளியின் தொடக்கப் பிரிவு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பில், கடந்த (08.09.2023) அன்றைய தினம் பொத்துஹெர பொலிஸில் மாணவனின் தந்தை முறைப்பாடு செய்திருந்த நிலையில், நேற்று (12.09.2023) பாடசாலைக்கு பெற்றோர் குழுவொன்றும் வருகை தந்துள்ளது.
பாடசாலை அதிபரின் செயற்பாடு
இது தொடர்பில் அங்குள்ள அதிபரிடம் கலந்துரையாடியதாக பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பின்னர் பெற்றோர்கள் தமது கடமைகளுக்கு இடையூறு செய்ததாக அதிபர் குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெற்றோர்கள்
இதன்படி, பல பெற்றோர்கள் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் முறைப்பாட்டின் பிரகாரம் குருநாகல் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் இது தொடர்பில் தனியான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
மாணவர்களின் வாக்குமூலம்
அங்கு மாணவர்கள் தாம் எதிர்கொண்ட சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியதையடுத்து, அந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் குறித்த ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் நாளைய தினம்
(14.09.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.