கொலண்டில் மாவீரர் நாளுக்காக நீதிமன்றம் சென்ற தமிழர்கள்!
கொலண்டில் மாவீரர் தினத்துக்காக தமிழர்கள் நீதிமன்றம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கொலண்டில் மாவீரர் தினத்துக்காக மண்டபம் ஒழுங்கு செய்வது வழமையாகும்.
அந்தவகையில் இம்முறையும் வழமையான ஏற்பட்டுக்குழுவினர் மாவீரர் நாளுக்காக மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் அதேமண்டபத்தை வேறொரு குழுவினரும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த மண்டபம் வழமையாக வழங்கின்றவர்களுக்கே வழங்கவேண்டுமென ஒப்பந்தம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் மண்டப ஏற்பாடாளர் அது தெரியாமல் மற்ற குழுவினருக்கு அம்மண்டபத்தை வழங்குவதற்கு கொடுத்ததால் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
இதனையடுத்து இரு குழுவினரில் யாருக்கு அந்த மண்டபத்தை கொடுப்பது என்ற நிலையில் குறித்த விவகாரம் அந்நாட்டு நீதிமன்றm சென்றுள்ள நிலையில் இருதரப்பும் யாருக்கு மண்டபம் கிடைக்கும் என நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்காய் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் புனிதநாளான ஓர் மாவீரர்நாளைகூட தமிழ்சமூகம் ஒற்றுமையாக நினைவுகூரமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளதென கொலண்ட் வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.