ஆஸ்திரேலியாவில் மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்!
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா மெல்போர்னில் குடியேறியுள்ள கார்த்திக் தணிகைமணி, (Karthick Thanigaimani ) தீயணைப்புப் படையில் தன்னார்வ தொண்டராகப் பல வருடங்களாகப் பணியாற்றி வருகிறார்.
அண்மையில் அவர் மனநலம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக அவர் ஒரு பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார். கார்த்திக் தணிகைமணியின் (Karthick Thanigaimani ) பின்னணி குறித்தும், தீயணைப்புப் படையில் அவர் ஆற்றும் பணிகள் குறித்தும், அவரது விழிப்புணர்வுப் பிரச்சாரம் குறித்தும் அவருடன் சமூக ஊடவியாளர் ஒருவர் உரையாடியுள்ளார்.
கார்த்திக் தணிகைமணி சொந்த ஊர் இந்தியாவில் உள்ள சென்னை எனவும், அஸ்திரேலியாவிற்கு 2008யில் மெல்போர்னில் ( (Melbourne) ) வாழ்ந்து வருதாக தெரிவித்துள்ளார்.
இவர் மெல்போர்னில் உள்ள முதன்மையான IT கம்பெனியில் பணிபுரிந்து வருதாக தெரிவருவதாகவும், தீயணைப்புப் படையில் 2015 பெப்ரவரியில் தன்னார்வ தொண்டராகப் சேர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள குடும்பத்தினர் மற்றும் அவருடன் வசிக்கும் மனைவி உட்பட பலர் இந்த சேவை மிகவும் ஆபத்தனாது, கடினமானது என தெரிவித்ததாக கூறியினர். இருப்பினும் தற்போது மனைவி மட்டும் குழந்தைகள் மிகவும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.
இதேவேளை மனநலம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் கார்த்திக் தணிகைமணி தற்போது ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதுகுறித்து அவர் தெரிவித்தது,
இரு வருடங்களாக கொரோனா தொற்று பரவலால் வீட்டில் இருந்து பணி செய்பவர்கள், மற்றும் சொந்த ஊர்களுக்கு போகமுடியாமல் இருப்பதால் மன ஆரோக்கியம் பாதிப்படைந்து இருப்போருக்கு, ஒரு பாதுகாப்பையும், அவர்களின் மன ஆரோக்கியதை பேணுவதற்கான முயற்சியாக இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுவருதாக தெரிவித்துள்ளார்.