முதலமைச்சர் விஜய் சிலை ஆலயத்தில் பிரதிஷ்டை
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு மண்ணில் சிலை அமைத்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புகைபடம் சமூக வலைத்தளங்க்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் நாடு கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினருமான பி. ராஜ்குமார், தேர்தலுக்கு முன்பாகவே தனது கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்றும், தானும் கடலூர் மக்களின் பிரதிநிதியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில்...
அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் விஜய் மற்றும் தன்னை பிரதிபலிக்கும் வகையில் மண் சிலைகளை வடிவமைத்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலைகளுக்கு ஆலய அர்ச்சகர்கள் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதுடன், மங்கள ஆரத்தி, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தனது தலைவரின் வெற்றிக்காக மண் சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பி. ராஜ்குமாரின் இந்த நடவடிக்கை, தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.