அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றம்; முதலமைச்சர் விஜய் திட்டம்
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அமைச்சரவையில் முதல் கட்ட மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த இரகசிய செயல்திறன் ஆய்வறிக்கையின் அடிப்படையில், இந்த மாற்றங்க்கள் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல்வேறு புகார்கள் மற்றும் போதிய செயல்திறன் இன்மை காரணமாக சில அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் மாத சட்டப்பேரவை பாதீட்டுக்கான கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இந்த அமைச்சரவை மாற்றம் மற்றும் இலாகா மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி அமைச்சர் ஜெகதீஸ்வரி, அமைச்சர் விஜய் பாலாஜி, அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகியோர் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசிடமிருந்து இந்தச் சம்பவம் தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.