இலங்கையில் தமிழ் சாதனை பெண்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை! இதற்கு என்ன காரணம்?
இந்தியாவிற்கு சென்று பாடிய சிங்களப் பொப் பாடகி யோகானிக்கு கொழும்பில் வீடு கட்ட பல கோடி ரூபா பெறுமதியான காணி வழங்கிய சிங்கள அரசாங்கம் வழங்கியது.
பிலிப்பைன்ஸ் சென்று பல சாதனை புரிந்த தமிழ் பெண் அகிலத்திருநாயகிக்கு அரசாங்கம் வழங்கிய பரிசு என்ன?
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது ஈட்டி எறிதலில் தங்க பதக்கம் வென்ற பிரியந்த ஹேரத்திற்கு கொழும்பு - 02 கொம்பனி தெருவில் வீடு ஒன்றை பரிசளித்துள்ளார்.
ஆனால் அதேவேளை குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இந்துகாதேவிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எந்த பரிசும் அளிக்கவில்லை.
இதற்கு பிரியந்த ஹேரத் சிங்களவர், இந்துகாதேவி தமிழர் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் உண்டா? என முகநூலில் தோழர் பாலன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.