கோட்டை ரயில் நிலையத்தில் தமிழுக்கு வந்த நிலை; இப்படியுமா!
கோட்டை ரயில் நிலையத்தில் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான ஓய்வறை ரயில்வே திணைக்களத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுத்தமான, மேம்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட ஓய்வறை ,மக்கள் பாவனைக்கு இப்போது திறக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வசதிகள்
அத்துடன் ஒரு நபருக்கு ரூ. 50 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ஓய்வறையில் கழிப்பறைகள், ஓய்வெடுக்கும் பகுதி, தனி சாப்பாட்டுப் பகுதி மற்றும் பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிறப்புப் பகுதி ஆகியவை உள்ளன.
"ரயில் பயணிகள் இந்த இடத்தை தங்கள் சொந்த வீடாகக் கவனித்து, இந்த வசதிகளைப் பராமரிக்க எங்களுக்கு உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என ரயில்வே திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை ஓய்வறையின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.