கிழக்கில் தமிழ் மாணவிக்கு நடந்த அவலம்; அம்பலமாகும் உண்மைகள்!
மூதுார் பட்டித்திடல் பகுதி பாடசாலை ஒன்றில் உடற்கல்வி கற்பிக்கும் திருமணமான ஆசிரியர் ஒருவர் உயர் தர மாணவி ஒருவருக்கு தகாத படங்களை அனுப்பிய சம்பவம் அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களின் முன்னர் இடம் பெற்ற இச்சம்பவத்தை யாரும் கருத்தில் எடுக்க வில்லை என்பதுடன், பாதிக்கப் பட்ட மாணவிக்கு நீதி பெற்றுக் கொடுக்க யாரும் முற்பட வில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மிக வேதனையான சம்பவம்
கிழக்கு மாகாண ஆளுநர் பெண், கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளர் பெண் இப்படியாக உயர் அதிகாரத்தில் பெண்கள் இருக்கும் போது ஒரு மாணவிக்கு இந்த அவலமா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் பெண்கள் உயர் பதவிகளில் இருந்தும் இந்த அவலம் தொடர்வது மிக வேதனையான சம்பவம். அதேவேளை பாதிக்கப் பட்ட மாணவி வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆசிரியரோ மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் எனவும் கூறப்படுகின்றது.
மிகவும் அருவருக்கத் தக்க குற்றங்களைச் செய்த குறித்த ஆசிரியர் எந்த ஒரு தண்டனையும் இல்லாமல் இராஜாங்க அமைச்சரின் தலையீட்டையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.