கொழும்பில் பொலிஸாரால் சல்லடை போட்டு தேடப்படும் தமிழர்!
கொழும்பில் தமிழர் ஒருவரை கண்டு பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, லெஸ்லி, ரணகல மாவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கடந்த மே மாதம் 20ஆம் திகதி, டி - 56 ரக துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்தனர்.
CID விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவிசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் தற்போது அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளாா்.
புஷ்பராஜ் விக்னேஷ்வரன் என்ற 27 வயதுடைய, 131/47/47, ஜம்பட்டாவீதி, கொழும்பு 13ஐ வசிப்பிடமாக கொண்ட, மீன் வியாபாரி என்பவரே தேடப்படுபவராவார்.
தகவல் தெரிந்தவர்கள்,
பணிப்பாளர் குற்றப்பிரிவு :- 071 - 8591733
எல்லை குற்றப்பிரிவு :- 071 – 8591735
விசாரணை பிரிவு 1 :- 071 – 8596503க்கு தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.