தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா!
வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா என்பது தொடர்பாக வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் இன்று (03) வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.
வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டிலான இந்த கலந்துரையாடலின் பின்னர், வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்தனர் .
வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களையும் அழைத்து அதன் ஊடாக ஒரு பொதுவேட்பாளர் தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பாக கலந்துரையாடலினை மேற்கொண்டு எமக்கு தெளிவுபடுத்தினால் நாங்கள் பொது வேட்பாளர் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வினை நோக்கி நகர்வதாக தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.