யாழ்ப்பாண பகுதியில் இடம்பெற்ற கையெழுத்து சேகரிப்பு போராட்டம்!
அரசியல் கைதிகளின் விடுதலையை செய்ய கோரி இன்றையதினம் (06-01-2025) யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிக் கடந்த 6 நாட்களாகக் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இன்று 7 நாளாக யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிகிப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நாளையதினம் (07-01-2025) வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.