12 வருடங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் தற்போது நிரபாரதியென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை அக்கரைப்பற்று,சின்னபானங்காட்டை சேர்ந்த கதிரவேலு(29) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 12 வருடங்களுக்குப் பிறகே இவர் நிரபாரதியென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை ஆகியுள்ளார். கொழும்பு - புதிய மகசின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கொரோனா பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலை புலிகளுடன் தொடர்பில் இருந்தார் என சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டார். அதன் பிறகு ஒருவருட காலமாக பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் 2011 ஆம் ஆண்டு மொனராகலை நீதிமன்ற்றத்தில் நீதிவானால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இருப்பினும் அதன் பிறகு சுமார் 12 ஆண்டுகள் வரையில் அவர் மீது எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனையடுத்து சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் அவர்கள் தகுந்த நியாயங்களை எடுத்துரைத்து கபிலனின் விடுதலைக்கு முன்னின்றார்.
இத காரணமாக அரசியல் கைதிக்கு எதிராக குற்றத்தை நிரூபணம் செய்ய போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவரை நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.