பிணையில் விடுதலையான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மூன்று பேர் உட்பட நால்வர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் யாழ். மாட்ட அமைப்பாளர் தீபன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இன்று, யாழ்ப்பாணம் - மருதங்கேணி சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக பொலிஸாரால் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இன்று காலை 9.45 மணி முதல் 2.00 மணி வரை இரணைமடு சந்தியிலுள்ள மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் இவர்களது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
வாக்கு மூலம் பெற்ற பின் அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பான செய்திகள்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த மூவர் சற்று முன்னர் கைது(Photos)