அமெரிக்காவிலிருந்து ரணிலைப் பார்க்க விரைந்த அரசியல் பிரபலம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிட சென்றுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹர்ஷ டி சில்வா, தன்னை அரசியலுக்குள் கொண்டு சென்ற தலைவரைப் பார்க்கச் சென்றதாக ஊடகங்களிடமும் தெரிவித்துள்ளார்.
அவர் ஆரோக்கியமாக இருக்கின்றார்
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அவர் ஆரோக்கியமாக இருக்கின்றார். தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டிருக்கின்றார். கோபம் மற்றும் பழிவாங்கும் அரசியல் நாட்டுக்கு பொறுத்தமானதல்ல.
இவ்வாறான அரசியலால் சமூகத்திலுள்ள பிரிவினைவாதம் மேலும் அதிகரிக்கும்.
பிரிவினைவாதங்களை சரி செய்வதை விடுத்து அவற்றை மேலும் ஊக்குவிப்பதானது நாட்டின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கும் எனத் தெரிவித்தார்.