அவுஸ்திரேலியாவில் தீயில் கருகிய தமிழ் தாய் மற்றும் பிள்ளைகள்; லண்டனில் இருந்து சென்றவர்களா? வெளியான தகவல்
அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன்னர் காரில் தீயில் கருகி உயிரிழந்த தமிழ் தாய் மற்றும் இரண்டு பிள்ளை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தனது இரண்டு பிள்ளைகளையும் தமிழ் பெண்ணான தாயொருவர் தன்னோடு காரில் வைத்து தீயிட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் இதுவொரு தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் தொர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதனபடி லண்டனில் பல வருடங்கள் வாழ்ந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு பலம்பெயர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் தெற்கே கூகி பகுதியில் கடற்கரைக்கு அருகேயுள்ள ஜான் கிரஹாம் ரிசர்வ் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. அப் பகுதியில் நிறுத்தப்பட்டிறருந்த கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் அதனை அணைக்க பொலிஸார் முயச்சித்துள்னர். எனினும் எரிந்த காரினுள் இருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.
தனது இரண்டு குழந்தைகளுடனும் எரிந்து பலியான நிலையில் பெண்ணின் கணவர் அமெரிக்கா சென்ற நிலையில் இடைநடுவில் நாடு திரும்பியுள்ளார். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உறவினரைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று கொண்டிருந்தவர், தனது குடும்பம் காரோடு எரிந்து பலியான சம்பவத்தைக் கேள்வியுற்று, டோஹாவுடன் பயணத்தை இடைநிறுத்தி, நாடு திரும்பியுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தை பார்த்து அவர் அதிர்ந்து போயுள்ள்ளதாக கூறப்படுகின்றது. நாடு திரும்பிய செல்வன் கோவிந்தன் வைரவன், தனது மனைவி என்ன காரணத்துக்காக இந்தக் முடிவை எடுத்தார் என, எந்தப் பதிலுமின்றி அதிர்ந்துபோயுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த செல்வன் கோவிந்தன் வைரவன் – செல்வம்மா தம்பதிகளின் இரண்டு குழந்தைகளும் லண்டனில் பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது. லண்டனில் பல வருடங்களாக வாழ்ந்த அவர்கள், அங்கிருந்து ஏழு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து மெல்பேர்னில் வசித்தார்கள் என கூறப்படுகின்றது.
அதன் பின்னர், பேர்த் நகருக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்திருந்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.