சிங்கள அமைச்சரின் நிகழ்வில் புறக்கணிக்கபட்ட தமிழ் மொழி?
நாம் தமிழராக இருந்தால் மாற்றம் முதலில் தமிழ் மொழியில் இருந்து ஆரம்பமாக வேண்டும். இதற்காக போட்டி போட்டுக் கொண்டு சண்டை பிடிக்க எதிரும் புதிருமாக வாதம் செய்வதற்கு தமிழ் கட்சிகள், அரசியல் தலைவர்கள் முன் வர வேண்டும்.
சிங்கப்பூரில் தனித் தமிழ், நான் தமிழன், நான் சேர சோழ பாண்டிய பரம்பரை எனது இனம் தமிழ் என்று தங்களை அடையாளப்படுத்தி பெருமை பேசும் நாம் முதலில் மாற்றத்தை நம்மிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நாம் மாற வேண்டும் நாம் இருக்கும் இடம் மாற வேண்டும் நம்மை சுற்றி இருப்பவர்களை மாற்றத்திற்காக தூண்ட வேண்டும். விடுதலை என்பதும், உரிமை என்பதும் பிறரிடம் இருந்து பெறுவது மட்டுமல்ல.
எங்களிடம் இருக்கும் வளங்களை அறிந்து அதனை எமது விடுதலை உரிமைகளுக்காக பயன்படுத்த வேண்டும்.
தென்னிலங்கையில் தமிழை தேடும் நாம், இலங்கை அரசாங்கம் தமிழுக்கு எதிராக செயற்படுகிறது என்று போராடும் நாம் நமது மண்ணில் நமது கண்ணுக்கு முன்னால் தமிழ் மொழி அழிக்கப்படும் போது ஊமையாக இருக்கிறோம்.
சிங்கள அமைச்சரின் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு என கூச்சல் இடும் நாம் தமிழ் அமைச்சர்களின் நிகழ்வில் தமிழ் மொழியை காணவில்லை என்று கேட்காது ஒதுங்கி நிற்கிறோம். இதுதான் எமது போராட்டம், தமிழ் மொழி மீதான பற்றுறுதி.
இனத்தின் அடையாளத்தை, கலாசாரத்தை பண்பாட்டு உரிமைகளை நாமே அழிக்கும் போது அதனை கண்டும் காணாமல் விடுவதால் சமூகத்தில் எமது மொழியை மற்றவர்கள் அழிக்கும் போது அதற்கு எதிராக போராடுவதற்கு தகுதி அற்றவர்களே