பிரான்ஸில் நண்பர்களால் ஈழத் தமிழர் இளைஞருக்கு நேர்ந்த அவலம்!
பிரான்ஸில் வசித்து வரும் ஈழ தமிழ் இளைஞர் பிரான்ஸில் தாதியாக வேலைபார்க்கும் தமிழ் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் குறித்த காதலர் சாதரணமாக உணவக வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அப்பாவியான அந்த இளஞர் வேலையும் காதலுமாக சந்தோசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞர் தன் நண்பர்களிடம் காதலை பற்றி உளறியுள்ளார்.
நண்பர்கள் இந்த பக்கம் சிரித்து கொண்டே அந்த பக்கமாக இருவரையும் பிரிக்கின்ற வேலையில் இறங்கியுள்ளனர்.
பெண் வீட்டில் பற்றவைத்த நண்பர்கள்
உழைத்து வாழ்வில் முன்னுக்கு வந்துவிட்டு திருமணம் செய்யலாம் என அந்த இளஞர் கனவில் இருந்த போது அதற்குள் நண்பர்கள் பெண் வீட்டு சொந்தகாரரிடம் அவ்வளவு படித்த உங்கள் பெண் போயும் போயும் ஒரு கோப்பை கழுவுறவனை காதலிக்கிறாள் என பற்ற வைத்துள்ளனர்.
நண்பர்கள் கொளுத்தி போட்டது பெண் வீட்டில் பற்றி எரிய ஆரம்பித்ததும் குறித்த பெண் தன் காதலை அப்படியே எடுத்த இடத்திலேயே போட்டு விட்டு சொல்லி கொள்ளாமல் நகர்ந்துள்ளார்.
நடந்த சம்பவங்கள் எதுவும் அறியாத அப்பாவி காதலர் இ அதே நண்பர்களிடம் தன் சோகத்தை சொல்லி அழுது கொண்டு திரிவதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.