தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் இவருக்குதான்! சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு
தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு அக் கட்சியின் அரசியல்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை வழங்கும் விடயம் தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றது.
விவாதங்களின் பின்னர் குறித்த தேசியபட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னிதேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த தீர்மானம் இவ்வாறு எடுக்கப்பட்டதாக யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
குறித்த அரசியல் குழுக்கூட்டத்தில் சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், த.கலையரசன், மற்றும் துரைராஜசிங்கம் குலநாயகம், செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.