ஐநா முக்கிய ஆலோசனைக் குழுவில் தமிழர் ஒருவர் நியமனம்!
ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய ஆலோ சனைக் குழுவில் சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நியமிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், ஐநாவின் புதிய உயர்மட்ட பலதரப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். 12 உறுப்பினர்களைக் கொண்ட அக் குழுவில் உலகத் தலைவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
உலகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை இந்த குழு ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கும். அவர்களின் பரிந்துரைகள் 2023ல் நடைபெறவுள்ள ஐநா உறுப்பு நாடுகள் பங்கேற்கும் உத்தேச எதிர்கால உச்சநிலை மாநாட்டில் தெரிவிக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் சபையில் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (António Guterres) புதிய ஆலோசனைக் குழு பற்றிய விவ ரங்களை நேற்று முன் தினம் வெளியிட்டார்.
“புதிய குழுவுக்கு ஐநா பல் கலைக்கழக கொள்கை ஆய்வு நிலையம் ஆதரவு வழங்கும்,” என்று நேற்றைய அறிக்கையில் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
அதேவேள இ கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகம் எதிநோக்கும் முக்கியப் பிரச்சி னைகள் வலுவான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (António Guterres) வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.