மோட்ச நிலை கிட்டும் ஏகாதசி; 2023 ம் ஆண்டில் 25 ஏகாதசிகள்!
இந்துக்களின் முக்கியமான விரத நாட்களில் ஏகாதசி விரதம் மிக முக்கியமானது. இது மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தொலைவதுடன், இனி பிறவாத நிலையான மோட்ச நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
விரதம்
சிலர் நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் இந்த ஏகாதசி விரதம் இருப்பார்கள். இதற்கு நிர்ஜல விரதம் என்றும் பெயர்.
ஒரு சிலர் பழங்கள் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு ஏகாதசி விரதம் இருப்பார்கள். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி திதியில் தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சுக்ல பட்சத்தில் ஒன்று, கிருஷ்ண பட்சத்தில் ஒன்று என ஒரு மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி வரும்.
2023 ம் ஆண்டில் மொத்தமாக 25 ஏகாதசிகள் வர உள்ளன.
2023 ம் ஆண்டில் வரும் எந்த ஏகாதசிக்கு என்ன பெயர், எத்தனை மணிக்கு துவங்கி, எத்தனை மணிக்க ஏகாதசி திதி நிறைவடைகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
ஏகாதசியன்று என்ன செய்ய வேண்டும்?
* அதிகாலையில் எழுந்த நீராட வேண்டும். ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடுவது சிறப்பானது.
* விஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் படங்களை வைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
* மலர்கள் அல்லது மாலை, இனிப்புக்கள், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை படைத்து வழிபட வேண்டும்.
* ஏகாதசி பூஜையில் துளசி கண்டிப்பாக இடம்பெற வேண்டும். விஷ்ணுவிற்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் துளசி இலைகள் சேர்க்கப்பட வேண்டும்.
* ஏகாதசி பற்றிய கதைகளை படிக்கவோ, கேட்கவோ செய்யலாம். ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
* விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.
* விரதம் நிறைவு செய்யும் போது சாத்வீக உணவுகளையே உண்ண வேண்டும்.
என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?
* ஓம் நமோ பகவதே வாசுதேவாய
* ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
2023 ம் ஆண்டு ஏகாதசி நாட்கள் மற்றும் நேரம் :