முதலமைச்சராக பதவியேற்ற பின் அரங்கத்தை அதிர வைத்த விஜயின் உரை.. விண்ணதிர்ந்த கோஷம்

Vijay Tamil nadu India TVK
By Vironika May 10, 2026 06:01 AM GMT
Report

ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதன் பின்னர் அமைச்சர்கள் பதவி பிரமாணம் முடிந்தவுடன் உரையாற்றினார். 

என் நெஞ்சில் குடியிருக்கும், உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டுமென்று ஒரு சாதாரண உதவி இயக்குனரின் பிள்ளை நான் என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின் அரங்கத்தை அதிர வைத்த விஜயின் உரை.. விண்ணதிர்ந்த கோஷம் | Taking Oath As C M Vijay Delivered A Speech

ஜோசப் விஜய்யாகிய நான்.. 

முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின்னர் முதன் முறையாக உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், வறுமை என்றால் என்னவென்று எனக்கு தெரியும்.

பசியென்றால் என்னவென்று எனக்குத் தெரியும். உங்களில் ஒருவன் தான். உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி.. இந்த தேர்தல் களத்தில் நான் இறங்கியபோது, நான் அதிக அவமானங்களையும், வலிகளையும் சந்திக்க நேரிட்டது.

முதலமைச்சராக பதவியேற்ற பின் அரங்கத்தை அதிர வைத்த விஜயின் உரை.. விண்ணதிர்ந்த கோஷம் | Taking Oath As C M Vijay Delivered A Speech

அது என்னை மட்டுமல்ல, என் மக்களாக உங்களையும் பாதித்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி, எனக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி. இத்தனைப் போராட்டங்களை கடந்து இன்று C.ஜோசப் விஜய்யாகிய நான்.. என்ற கூற்றை உண்மையாக்கியிருக்கின்றீர்கள்.

நான் தேவதூதன் ஒன்றும் அல்ல. நானும் ஒரு சாதாரண மனிதன் தான். நான் முன்னரே கூறியது போல, சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன். என்னால் எது சாத்தியமோ அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.

பதவியேற்பு மேடையிலேயே முதலமைச்சர் விஜயின் முதல் கையெழுத்து ; அதிரவிடும் அறிவிப்பு

பதவியேற்பு மேடையிலேயே முதலமைச்சர் விஜயின் முதல் கையெழுத்து ; அதிரவிடும் அறிவிப்பு

இத்தனைக் கோடி மக்கள் என்னோடு இருக்கும் போது சாத்தியமற்றது எதுவுமல்ல. என்ன வேண்டுமென்றாலும் என்னால் பார்த்துக் கொள்ள முடியும். மிக இக்கட்டான நிலையில் இந்த அரசாங்கத்தை நான் பொறுப்பேற்றிருக்கின்றேன்.

மிக அதிக கடன் தொகை, திறைசேரியே காலியாகியிருப்பதாக தெரிகின்றது. உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் என்ன இருக்கின்றது இல்லை என்பது. அனைத்தையும் பார்த்த பிறகு, என்ன விபரங்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக நான் உங்களுக்கு வெளியிடுவேன்.

இவற்றை சரிசெய்ய எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். இது மக்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை மிகு உறுதியாக வைத்திருப்பேன். போதைப்பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டிய முயற்சி இன்றிலிருந்து எடுக்கப்படும்.

ஆண்டவன் மீது ஆணையிட்டு..விஜய் மீது பிரமாணம் செய்த அமைச்சர்கள்; புன்னகையுடன் பார்த்து ரசித்த முதல்வர்

ஆண்டவன் மீது ஆணையிட்டு..விஜய் மீது பிரமாணம் செய்த அமைச்சர்கள்; புன்னகையுடன் பார்த்து ரசித்த முதல்வர்

சட்டம், ஒழுங்கு மற்றும் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், என்னை கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும் அவர்களும் என் மக்கள்தானே.

நண்பர்களாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தானே. அடிப்படை விடயங்கள், கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்டவற்றில் என்னுடை முதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்று தோன்றுகின்றது. நான் முன்னதாகவே கூறியது போல, இந்த விஜய் மக்களது பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன்.

எனக்கு அது தேவையில்லை. தவறு செய்ய யாரையும் விடவும் மாட்டேன். அப்படியொரு எண்ணம் இருந்தால் இன்றே அதை அழித்து விடுங்கள். பெண்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அனைவரும் நன்றாக இருப்போம், நன்றாகவே இருப்போம். சிறுபான்மை இன மக்கள் எந்த காலத்திலும் துயருற கூடாது.

இலங்கையில் சில பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

இலங்கையில் சில பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

எப்போதும் அனைவருக்காகவும் இந்த விஜய் இருப்பேன். அடுத்தது, இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா நண்பீஸ் ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றியை நான் சொல்லியே ஆக வேண்டும். உங்களுடைய எதிர்காலத்திற்கான நான் உழைப்பேன்.

தமிழக வெற்றிக் கழக தோழர்களுக்கு எனது பெரிய நன்றிகள். நீங்கள் எனது உயிர். வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய ஆட்சியை அமைத்திடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US