டி20 உலகக்கோப்பை; 4 பந்தில் 4 விக்கெட்; சாதனை படைத்த ஹாட்ரிக்
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்று பிரிவு ஏபோட்டியில் இன்று அயர்லாந்தும், நெதர்லாந்தும் விளையாடி வருகின்றன, இதில் அயர்லாந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்ஃபர் ஹாட்ரிக் (Curtis Campher) சாதனையோடு 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்திய சாதனை புரிந்துள்ளார்.
இதன்மூலம் அயர்லாந்துக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் கைப்பற்றிய வீரர் ஆனார் வலது கை வேகப்பந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்ஃபர் (Curtis Campher). ஆடவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ரஷீத் கான் அயர்லாந்துக்கு எதிராக 2019-ல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.
லசித் மலிங்கா 2019-ல் நியூசிலாந்துக்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போது கர்டிஸ் கேம்ஃபர் (Curtis Campher) 4 விக்கெட்டுகளை வரிசையாகக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.
ஆட்டத்தின் 10வது ஓவரை வீச வந்த கேம்ஃபர் (Curtis Campher) நெதர்லாந்தின் ஆக்கர்மேன் என்பவரை 11 ரன்களில் கேட்சில் வீழ்த்தினார். அடுத்த பந்தில் ரியான் டஸ்சதேவை எல்.பி.செய்தார். அடுத்த பந்தே எட்வர்ட்ஸ் என்பவரையும் எல்.பி.யில் வெளியேற்றினார் கர்டிஸ் கேம்பர் (Curtis Campher).
இது ஹாட்ரிக் (Curtis Campher) சாதனையாகக் கொண்டாடப்பட்ட வேளையில் அடுத்து இறங்கிய வான் டெர் மெர்வ் (van der Merwe)வெளியே சென்ற பந்தை பெரிய டிரைவ் ஆடப்போய் மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.
இந்நிலையில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள். அசாத்திய சாதனையை டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் சாதித்தார் கர்டிஸ் கேம்பர் (Curtis Campher).

