சிறுநீரக பாதிப்பை இணங்காணக்கூடிய அறிகுறிகள்!
உடலில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
ஆனால் எமது அன்றாட பழக்கவழக்கங்களால் முறையால் சிறுநீரக பாதிப்பு உண்டாகிறது.
இந்த சிறுநீரக பாதிப்பு இருந்தால் தென்படும் அறிகுறிகள் குறிப்பாக இரவு நேரங்களில் தென்படும் அறிகுறிகள் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும்.
இரவில் சரியாக தூங்க முடியவில்லை. அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுகிறது எனில் சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கும் வரலாம்.
சிறுநீர் கழிக்க ஒவ்வொரு இரவும் இரண்டு அல்லது அதற்கு மேல் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்தால் அது கவனிக்க வேண்டிய அறிகுறி ஆகும்.
சிறுநீர்ப்பை பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றத்தை உணரும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சுயமாக நீரிழிவு பரிசோதனை மட்டும் செய்து ஒன்றுமில்லை என்று முடிவெடுக்காமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்வது அவசியம்.
மூச்சுத்திணறல் பிரச்சினை
மூச்சுத்திணறல் என்பது சிறுநீரக நோய்களுடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகளில் ஒன்று. சிறுநீரகத்தின் செயற்பாடு பலவீனமாக இருக்கும் போது இந்த மூச்சுத்திணறல் உண்டாகலாம்.
பெரும்பாலும் படுத்திருக்கு போது நுரையீரலுக்கு கீழ் முனையிலிருந்து இரத்தத்தின் அளவு மறு பகிர்வு செய்யும் நிலையில் மூச்சுத்திணறல் உண்டாகலாம்.
சிறுநீர் நுரைத்து வெளியேறுவது
சிறுநீரக பாதிப்பின் முதல் அறிகுறி நுரைத்து வெளியேறும் சிறுநீர் தான்.
சிறுநீரில் நுரைத்து வெளியேறுவது சிறுநீருடன் புரதம் வெளியேறுவதை குறிக்கும் முக்கிய அறிகுறியாகும்.
புரதம் பொதுவாக சிறுநீரில் இருக்காது. அப்படி சிறுநீரில் புரதம் வெளியேறினால் அதில் புரத இருப்பு சிறுநீரகங்கள் கடுமையான ஆபத்தில் இருப்பதை குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.
அதனால் சிறுநீர் கழிக்கும் போது அவை வெளியேறும் நிலையையும் கவனிப்பது மிக முக்கியம்.
சிறுநீர் நிறம் மாறி வருவது
சிறுநீர் திடீரென்று நிறம் மாறி வந்தால் அது சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம்.
சிறுநீரக பாதிப்பு இருந்தால் சிறுநீர் இருண்ட நிறத்தில் வெளியேறுவதை கவனிக்கலாம்.
சில நேரங்களில் இது தொற்று அல்லது சிறுநீரக கற்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீர் துர்நாற்றத்துடன் வெளியேறலாம்.
இது சிறுநீரக பாதிப்பு அல்லது தொற்றுநோயை குறிக்கலாம்.
இரவில் தூக்கமின்மை
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்க கோளாறுகள் பொதுவானவை.
இவர்களுக்கு இரவு பகல் தலைகீழ் மாற்றம் ஏற்படும்.
மெலடோனின் என்னும் ஹார்மோன் தூக்கம் - விழிப்பு என்னும் சர்க்காடியன் தாளத்துக்கு காரணம்.
இது ஆரோக்கியமானவர்களுக்கு பகலில் குறைவாகவும் இரவில் அதிகமாகவும் இருக்கும்.
ஆனால் சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு மெலடோனின் அளவுகள் கணிசமாக குறைவதால் தூக்க கோளாறுகள் உண்டாகும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளது.
பாதங்களில் வீக்கம்
இரவு நேரங்களில் பாதங்களில் வீக்கம் என்பது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாகும்.
பொதுவாக சிறுநீரக நோய்களால் ஏற்படும் வீக்கம் மாலை மற்றும் இரவில் மோசமாகி காலை வேளையில் குறைந்துவிடும்.
இது நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அல்லது சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட சிறுநீரகத்தில் பல்வேறு கோளாறுகள் காரணமாக இருக்கலாம்.
இவ்வாறான அறிகுறிகளை இணங்கண்டால் தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வோம்.