யாழ்.வட்டுக்கோட்டையில் வாள்வெட்டுக்குழு அட்டூழியம்: குடும்பப்பெண்-சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!
வட்டுக்கோட்டை பகுதியில் குடும்ப பெண் மீதும் மகன் மீதும் வாள்வெட்டுக்குழு தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 45 வயதுடைய குடும்ப பெண்ணையும் 15 வயதுடைய மகனையும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சந்தேக நபரான 51 வயதான அயல்வீட்டுக்காரர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் கைதுசெய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.