வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இளைஞனை கத்தியால் வெட்டிய குடும்பஸ்த்தர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் பளை முல்லையடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் பின்னனி
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இளைஞன் நேற்றுமாலை வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நபர் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த இளைஞனை மீட்ட பொதுமக்கள் பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பளை முல்லையடி சேர்ந்த பால்ராஐ் துஷாந்தன் என்ற இளைஞன் மீதே கத்தி வெட்டு தாக்குதுல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸில் சரணடைவு
இதேவேளை சம்பவம் தொடர்பில் பளையச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளார்.
இந்நிலையில் தனிப்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.