வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டு
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைக் கூடத்தின் வாசலில் வைத்து ஏற்கனவே சிகிச்சையில் இருந்து ஒருவர் குறித்த வாள்வெட்டு காரணமாக பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு நடத்திய நபர்கள் குறித்த நோயாளியின் பெயரைக் குறிப்பிட்டு விசாரித்துள்ளனர். அப்போது கடமையிலிருந்த உத்தியோகத்தர் நோயாளி தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தார்.
அதன் பின்பு வைத்தியசாலையின் முதலாவது மாடியில் உள்ள சத்திர சிகிச்சைக் கூடத்தின் வாசசலில் காத்திருந்த மூவரும் அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த இவர்கள் தேடி வந்த நபரைப் வாசலில் வைத்து வெட்டியுள்ளனர்.
அப்போது வெட்டுக்காயத்துடன் அந்த நபர் சத்திர சிகிச்சைக் கூட்டத்திற்குள் தாக்கிய சென்றுள்ளார். பிறகு வாள்வெட்டு நடத்திய நபர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் தப்பியுள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.