சுதாரக்கவின் நெருங்கிய சகா போதைப்பொருளுடன் கைது
இரத்தமலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்கவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்தமலானை, கொளுமட சந்தை பகுதியில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை
இதன்போது அவரிடமிருந்து 6,000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்தமலானை, பங்களாவத்தை, ரஸ்டம் வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘படோவிட்ட அஸங்க’ என்பவருக்காக வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் 'சுதாரக்க' என்பவரின் நெருங்கிய ஆதரவாளர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.