இடைநிறுத்தப்படும் E-PASSPORT வழங்கும் திட்டம்!
எமது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் தேவைகளை கருத்திற்கொண்டு புதிய ஏல அழைப்பை கோருவதற்கும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக விசேட தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்றை நியமிப்பதற்கும் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இ-பாஸ்போர்ட்’ வழங்குவதற்காக EOI கள் அழைக்கப்பட்டதாகவும், பல ஆர்வலர்கள் EOI-யில் உள்ள சில தொழில்நுட்ப குறைபாடுகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சகத்திடம் முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க அமைச்சர் டிரான் அலஸ், சம்பந்தப்பட்ட ஏல அழைப்பை இரத்து செய்துள்ளார்.
ஆண்டுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான இ-பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
[0NFGQG ]
கடவுச்சீட்டு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு மில்லியன் கணக்கான டொலர்கள் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, அதிக விலையினால் ‘இ-கடவுச்சீட்டு’ வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.