பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுங்க அதிகாரியின் மோசமான செயல்
மனித பாவணைக்கு உதவாத பாம் எண்ணைய்களை விற்பனை செய்த சுங்க அத்தியட்சகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மனித பாவணைக்கு உதவாதென என பரிந்துரைக்கப்பட்ட 05 கொள்கலன் பாம் எண்ணைய்களை அழிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த பாம் எண்ணையை 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாம் எண்ணைய்கள்
மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என பரிந்துரைக்கப்பட்ட 05 கொள்கலன் பாம் எண்ணைய்களை அழிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், அந்த உத்தரவை மீறி அவற்றை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று, அதில் ஒரு கொள்கலனில் இருந்த பாம் எண்ணையயை 40 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், குறித்த கொள்கலன்களில் இருந்த பாம் எண்ணைய்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.