ஈஸ்டர் தாக்குதல்; 10 மாதங்களின் பின் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபர்கள்
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியை சேர்ந்த கைதான 62 பேரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 10 மாதத்துக்குப் பின்னர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு 56 பேர் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர் .
இந்த 56 பேருடன் குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் மற்றும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 6 உட்பட 62 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த 62 பேரும் பொலன்னறுவை, அநுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள். கடந்த 2020-10-15 ஆம் திகதி நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பாடது காணொளி மூலம் வழக்கு விசாரணைகளை இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் கடந்த 10 மாதத்துக்குப் பின்னர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் 7 பஸ்களில் அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://jvpnews.com/article/unrest-in-the-batticaloa-court-complex-area-1628146528
