யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர்கள் கைது
கோனகங்கார பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யால வனப்பகுதியில் 240,700 கஞ்சா செடிகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (02) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகம்வெஹெர பகுதியில் வசிக்கும் 25, 29 மற்றும் 45 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கோனகங்கார பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்கார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.