கடல் பசு இறைச்சியுடன் கைதான சந்தேக நபர்
மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடல் பசு இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் நேற்று (6) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சந்தேக நபர் வங்காலை , அக்னேஷ்புரத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் ஆவார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ கடல் பசு இறைச்சி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.