கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
நுகேகொடை, மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கந்தவத்த வீதி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
நுகேகொடை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுகேகொடை பகுதியில் வசிக்கும் 37 வயதுடையவர் என்பதுடன் சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 20 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.