வளர்ப்பு நாயால் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் கைது

Sahana
Report this article
கம்பஹா, மினுவாங்கொடை, தெவலபொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒருவரைத் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் இன்று (14) மினுவங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சந்தேக நபரின் வீட்டிற்குச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து நேற்று (13) மதியம் இந்தக் கொலை நடந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கனஹிமுல்ல, தெவலபொல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், அவரை கைது செய்வதற்காக மினுவாங்கொடை பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 65 வயதுடையவர் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.