88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் அதிரடியாக கைது
88 பிடியாணைகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு கொழும்பு அத்துருகிரிய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜபா மாவத்தை பகுதியில் நேற்று (11) பிற்பகல் பொலிஸ் குழுவொன்றுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று மோசடி செய்து தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 56 வயதுடைய வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பண மோசடிகள் தொடர்பில் மொரட்டுவ, காலி, வரக்காபொல மற்றும் பாணந்துறை ஆகிய நீதவான் நீதிமன்றங்களினால் சந்தேகநபருக்கு எதிராக 88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.