பிள்ளைகள் வெளிநாட்டில்: தாய், தந்தைக்கு கொலை மிரட்டல... 40 லட்சத்தை பறித்த சந்தேக நபர்!
பாணந்துறையில் பகுதியில் கோடீஸ்வர வயோதிப தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து 40 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் இரவு (21-08-2024) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பிள்ளைகள் வசிக்கும் நிலையில் 76 மற்றும் 75 வயதுடைய வயோதிப தம்பதியினர் சில வருடங்களுக்கு முன்பு தங்கள் நிலத்தை விற்பனை செய்துள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட சந்தேகநபர் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, 40 லட்சம் ரூபா கப்பம் பெற்றுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதெவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த தம்பதியினர் மற்றுமொரு காணியை அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும், இதனை அறிந்த சந்தேகநபர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து மேலும் 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, பணம் பெற வருமாறு சந்தேக நபரை, தம்பதி அழைத்த நிலையில் மறைந்திருந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.