சரணடைந்தவர்கள் தொடர்பில் நாளை வெளியாகவுள்ள உண்மைகள்!

Sri Lanka Army Sri Lankan Tamils Sri Lanka Final War LTTE Leader
By Sulokshi Jan 24, 2023 04:04 PM GMT
Report

   சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில், இலங்கை இராணுவத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணை நாளை (25) நடைபெற உள்ளது.

இராணுவத்துக்கு எதிராக மேன்முறையீடு

இராணுவத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான தகவல்கள் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது.

சரணடைந்தவர்கள் தொடர்பில் நாளை வெளியாகவுள்ள உண்மைகள்! | Surrendered Will Be Released Tomorrow

2019.04.04 – இறுதி யுத்தக் காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் 06 கேள்விகளைக் கொண்ட RTI விண்ணப்பம் இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

25.06.2019 – “இறுதி யுத்தக் காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை. இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்தனர்.” என இராணுவம் பதில் வழங்கியிருந்தது.

03.10.2019 – இராணுவம் வழங்கிய பதிலில் திருப்தியில்லை என்பதால், இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டது.

03.11.2022 – மூன்று வருடங்களுக்குப் பின்னர் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியிருந்த இராணுவம் தங்களிடம் புலிகள் எவரும் சரணடையவில்லை எனவும், சரணடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்றே கூறியிருந்தது.

எனினும், இராணுவம் பொய் கூறுவதாக சுட்டிக்காட்டி இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது. இதனை ஆராய்ந்த ஆணைக்குழு மேன்முறையீட்டாளர் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்றை வழங்க வேண்டுமெனவும் அதற்குப் பதில் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்றை இராணுவம் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

01.12.2022 – மேன்முறையீட்டாளரால் நீண்ட எழுத்துமூல சமர்ப்பணம் இலங்கை இராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

04.01.2023 – மீண்டும் இந்த மேன்​முறையீடு ஆணைக்குழு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை வழங்க

17.01.2023ஆம் திகதி வரை காலஅவகாசத்தை இராணுவம் கோரியது.

23.01.2023ஆம் திகதிக்கு முன்னர் பதில் எழுத்துமூல சமர்ப்பண்தை வழங்க வேண்டுமென ஆணைக்குழு இராணுவத்துக்கு உத்தரவிட்டது.

16.01.2023 – 2,253 பக்கங்களைக் கொண்ட நீண்ட பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தை இராணுவம் வழங்கியது .

23.01.2023 – இராணுவம் வழங்கிய பதில் எழுத்துமூல சமர்ப்பணத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 06 கேள்விகளுக்கும் பதில் இல்லை என ஆணைக்குழுவுக்கும், இராணுவத்துக்கும் எழுத்துமூல சமர்ப்பணம் ஒன்று மேன்முறையீட்டாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 25.01.2023 – நாளை மீண்டும் இது தொடர்பிலான விசாரணை நடைபெற உள்ளது.

மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US