ஆறாவது நாளாகவும் சுரேஷ் சலே உணவுத் தவிர்ப்பு போராட்டம்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், சுரேஷ் சலே, ஆறாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, கடந்த ஆறு நாட்களாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சுரேஷ் சலேவை நேரில் பார்ப்பதற்காக அவரது மனைவி மருத்துவமனைக்கு இன்றைய தினமும் வருகை தந்திருந்தார்.
இந் நிலையில் , சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் பல தடவைகள் கடிதம் மூலம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
தடுப்புக் காவலில் உள்ள தனது கணவரைச் சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குமாறுm அவர் அந்தக் கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.