வீட்டு சின்னத்தின் ஆதரவாளர் அதிரடியாக கைது!
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் வாக்கு சாவடிக்கு அண்மித்த பகுதியில் வீட்டுசின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் சின்னம் அடங்கிய துண்டுபிரசுரத்தினை மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்,
தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த நபரை கைது செய்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளரான 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.